அன்புக்குரிய அருட்பணியாளர்களே, அருட்கன்னியர்களே, அருட்சகோதரர்களே, அன்பு இறைமக்களே, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் வேண்டுகோளை ஏற்று கெய்ரோஸ் என்ற இந்த இளையோர் மாநாட்டை, இந்தியாவின் அனைத்து மறைமாவட்டங்களிலிருந்தும் கூடிவர இருக்கிற 5000 இளைஞர் இளம் பெண்களுக்கா, நமது மறைமாவட்டம் முன்னின்று நடத்தும் நான்கு நாட்கள் கூட்டம் இது. நமது பாண்டி-கடலூர் உயர்மறை மாவட்டத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு. இந்த கெய்ரோஸ் 2024. இந்தியா முழுவதிலிருந்தும் இளையோர்கள் ஒன்று திரண்டு இறைவனுக்கு நன்றி கூறும் இறை அனுபவம் பெறும் ஒரு மாபெரும் இளையோர் கூட்டம் இது.
கெய்ரோஸ் ஒரு நிகழ்வு மட்டுமல்ல இது ஒரு ஆன்மீக பயணம், கிறிஸ்துவுடன் நமது இளையோரின் இதயங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான வாழ்க்கையை மாற்றும் ஓரு உன்னத சந்திப்பு. விசுவாசத்திலும் சமூக ஈடுபதட்டிலும் வேரூன்றிய இந்த நிகழ்வு, உத்வேகம், ஒற்றுமை மற்றும் இயேசுவுடன் ஆழமான உறவைத் தேடும் இளைஞர்களின் தனித்துவமான கூட்டம். இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்துடன் (ஐஊலுஆ) இணைந்து “கிறிஸ்துவுக்காக ஒன்றித்திருக்கும் இளையோர்” (லுரு4ஊ இந்தியா) ஏற்பாடு செய்துள்ள கைரோஸ் 2024 காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அசாதாரண அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கைரோஸ், இளைஞர்களுக்கு ஆன்மீக திசைகாட்டியாக செயல்படுகிறது, உயிருள்ள இயேசுவுடன் ஆழமான சந்திப்புகளை நோக்கி அவர்களை வழிநடத்துகிறது. இது டிசம்பர் 27, 2008ல் தோற்றுவிக்கப்பட்டது, இது நம் திருத்தந்தை பிரான்சிஸின் உருமாறும் ஆன்மீக அனுபவங்களுக்கான அழைப்பை தொடர்ந்து எதிரொலிக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.